ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
actor sivakarthikeyan announce act in ravi mohan studios movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கான பணிகளையும் கடந்த சில வாரங்களாக செய்து வந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா தற்போது மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது. இந்த விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள், தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார்.

அவரை ரவி மோகன் மரியாதையுடன் வணங்கி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் விழாவில் எஸ்.ஜே சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்ததாவது " தயாரிப்பாளராக இருந்தால் ஒரே விஷயம் நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும். மேலும் ரவி சார் ஓட இந்த முயற்சியில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் உருவாகும். அவருடைய பேனரில் நானும் ஒரு திரைப்படம் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor sivakarthikeyan announce act in ravi mohan studios movie