இஸ்லாமாபாத் மசூதி குண்டுவெடிப்பு: பாகிஸ்தானின் ‘பழி போடும்’ அரசியலுக்கு இந்தியா பதிலடி!
Islamabad Mosque Blast India Slams Pakistans Blame Game
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த கொடூரமான தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்; 169 பேர் காயமடைந்தனர். உஸ்பெகிஸ்தான் அதிபர் அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டும் இந்தியாவின் மறுப்பும்:
தாக்குதலுக்கு ஐஎஸ் (ISIS) அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையிலும், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "இதன் பின்னணியில் இந்தியா - ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி உள்ளது" என வழக்கம்போல ஆதாரமின்றி குற்றம் சாட்டினார்.
இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், தனது கண்டனத்தை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது:
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. தனது சொந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளைத் தைக்க வழியில்லாமல், மற்றவர்கள் மீது பழிசுமத்தி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது.
தர்லாய் பகுதியில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதியில் தற்கொலைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு.
கைபர்-பக்துன்கவா பகுதியில் 24 பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சர்வதேச எதிர்வினை: அமெரிக்கா, பிரிட்டன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தொடர்ச்சியான தற்கொலைப் படைத் தாக்குதல்களால் பாகிஸ்தான் பதற்றத்தில் உள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் துணிச்சலான பதிலடி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
English Summary
Islamabad Mosque Blast India Slams Pakistans Blame Game