என் அப்பா பெங்காலி கத்துக்கிட்டது சினிமாக்காக இல்லை இவங்களுக்காக தான் ...! - ஸ்ருதிஹாசன்
My father LEARN Bengali not for cinema but ... Shruti Haasan
தமிழ் திரையுலகில் உலகநாயகன் என்று போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் இறுதியாக நடித்த 'இந்தியன் 2 மற்றும் தக் லைஃப்' திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

இதில் கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஸ்ருதிஹாசன் அவர் தெரிவித்ததாவது," பிரபல பெங்காலி நடிகை மீது என் தந்தைக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவர் பெங்காலி மொழியை படித்து கற்றுக் கொண்டார்"என்று தெரிவித்துள்ளார்.
மேலும், " சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்" என ஸ்ருதி ஹாசன் சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
My father LEARN Bengali not for cinema but ... Shruti Haasan