டெல்லியில் 13 இடங்களில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி.!!
enforcement department raide 13 places in delhi
இன்று டெல்லியில், முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான சவுரவ் பரத்வாஜ் வீடு உட்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.
அதாவது, ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் மருத்துவமனை கட்டுமான ஒப்பந்தங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரே நேரத்தில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இருப்பினும், இந்த சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்த சோதனை குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளதாவது:- அமலாக்கத்துறையின் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது. “சவுரவ் வீடு, சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது ஏன் தெரியுமா?. பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
English Summary
enforcement department raide 13 places in delhi