ரிதன்யா தற்கொலை வழக்கு: சமூக நலத்துறை அலுவகத்தில் ஆஜரான பெற்றோர்: முக்கிய ஆடியோ தகவல்களை சமர்ப்பித்துள்ளனர்..!
Parents appeared at the Social Welfare Office regarding Rithanyas suicide case
வரதட்சணை கொடுமையால், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ரிதன்யா (27, திருமணமான 78 நாட்களில் கடந்த மே 28-ஆம் தேதி காரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது பெற்றோர்தான் காரணம் என்று கூறி, வாட்ஸ் அப்பில் அவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசும் பொருளானது.
இது தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தது இருந்த நிலையில், தற்போது அவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ரிதன்யாவின் தற்கொலை தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமையிலான குழுவினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விசாரணையை தொடங்கினர்.

குறித்த விசாரணை குழுவினரின் முன்பு ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் சகோதரர் மிதுன், உறவினர்கள் ஆகியோர் ஆஜர் ஆகியுள்ளனர். இதன் போது, ரிதன்யாவின் தற்கொலை, வரதட்சணை கொடுமை தொடர்பாக உள்ள ஆதாரங்களுடன் இன்று ஆஜராகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி கூறுகையில், தற்கொலை சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் சம்மன் வழங்கப்பட்டது.
ரிதன்யாவின் பெற்றோர் ஆஜராகி சில ஆடியோ உள்ளிட்ட தகவல்களை வழங்கி உள்ளனர். ஆனால், கணவன் கவின்குமார் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. அதனால் அவர்கள் ஆஜராகும்படி மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Parents appeared at the Social Welfare Office regarding Rithanyas suicide case