'ரயில்வேயில் விபத்துகளுக்கு மிக முக்கிய காரணம் மாநில மொழியறிவற்ற ஊழியர்கள்: இதனால் இந்தி திணிப்பை கைவிட வேண்டும்': மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்..!
Madurai MP Su Venkatesan says Hindi imposition should be abandoned as illiterate employees are the main cause of accidents on the railways
சமீப காலமாக ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அந்த மாநில மொழியறிவற்ற ஊழியர்கள் இருப்பதாகும். இதனால் இந்தி திணிப்பை அறவே கைவிட வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டில் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த வாரம் தெற்கு ரயில்வேயில் பதவி உயர்வுக்கான ஒரு தேர்வில் அதற்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம் இந்தி மொழிகளில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
ஆனால், அந்த தேர்வுதாளில் தமிழில் வினாத்தாள் இல்லை. இதற்கு எதிராக ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து நேற்று அடுத்த சுற்றறிக்கை வந்தது. அதில், தெற்கு ரயில்வே என்பது அலுவலர்களுக்கு இந்தி அறிவை வளர்த்துக் கொள்ளவும், பயிற்சி, ஆளுமை வளர்த்துக் கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இந்தி கற்றுக் கொண்டால் பதவி உயர்வுக்கு அது ஒரு தகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று, அப்பட்டமாக இந்தி திணிப்பை எல்லா வகையிலும் மேற்கொள்வதன் இன்னொரு அடையாளம்தான் இது என்று எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் குறிப்பிடுகையில், ஒன்றிய ஆட்சி மொழி சட்டம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான குழு மிக கொடுமையாக இந்தி பேசாத மாநிலங்கள் மீது குறிப்பாக ரயில்வே, தபால், இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இந்தியை திணிக்கும் வேலையை செய்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
உடனடியாக, தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும், இந்தி பிரச்னை என்பது அலுவலக சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. சமீப காலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அந்த மாநில மொழியறிவற்ற ஊழியர்கள் இருப்பதாகும். எனவே, இந்தி திணிப்பை அறவே கைவிட வேண்டும் என்றும் அவரும் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Madurai MP Su Venkatesan says Hindi imposition should be abandoned as illiterate employees are the main cause of accidents on the railways