அமிர்தசரசில் போலி கால்சென்டர்: அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.350 கோடி மோசடி செய்துள்ள 03 பேர் கைது..!
03 people arrested for defrauding Americans of Rs 350 crore through a fake call center in Amritsar
அமிர்தசரசில் போலி கால் செண்டர் அமைத்து அமெரிக்கர்களிடம் 350 கோடி மோசடி செய்துள்ள கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கால்சா பெண்கள் கல்லூரிக்கு எதிரே உள்ள குளோபல் டவர்ஸ் கட்டிடத்தில்'டிஜிகேப்ஸ்' என்ற பெயரில் கால் சென்டர் ஒன்றை ஜிகர் அகமது, யாஷ் குரானா, இந்தர்ஜித் சிங் பாலி உள்ளிட்டோர் நடத்தி வந்துள்ளனர்.
இந்த சட்ட விரோத கால்சென்டர் மூலம் அமெரிக்க குடிமக்களிடம் இருந்து இவர்கள் ரூ. 350 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. இவர்கள், தொழில்நுட்ப ஆதரவு அளிப்பதாக கூறி அமெரிக்க குடிமக்களை ஏமாற்றியுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து அனுமதியின்றி பணத்தையும் எடுத்துள்ளனர்.

அவ்வாறு மோசடி செய்து எடுத்த பணத்தை பல வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கிருந்து பல்வேறு கணக்குகள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். 2023 மற்றும் 2025 க்கு இடையிலான காக்கட்டத்தில் இவர்கள் 350 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் அமிர்தசரஸ் மற்றும் டெல்லியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் சைபர் கிரைமில் ஈடுப்பட்ட ஜிகர் அகமது, யாஷ் குரானா, இந்தர்ஜீத் சிங் பாலியை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகின்றது.
English Summary
03 people arrested for defrauding Americans of Rs 350 crore through a fake call center in Amritsar