நாளை வெளியாகிறது திரௌபதி 2 படத்தின் பர்ஸ்ட் லுக்.!!
draupathi 2 movie first look poster published
திரௌபதி 2 படத்தின் பிரஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. அதன் பின்னர் அவர் கடந்த 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார்.
இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அவர் செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதையடுத்து மோகன் ஜி இயக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் திரௌபதி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 10.58 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
draupathi 2 movie first look poster published