அவர் நிறைய ரன்கள் அடிக்க புஜாரா முக்கிய காரணம்.. முன்னாள் வீரர் பாராட்டு!
Pujara is a key reason for him scoring a lot of runs Praise from the former player
புஜாரா 3வது இடத்தில் நங்கூரமாக விளையாடியதாலயே 4வது இடத்தில் விராட் கோலி நிறைய ரன்கள் குவித்ததாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து ‘சுவர்’ என்று அழைக்கப்பட்ட புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.
இனி இந்திய அணியில் தனக்கும் மறுபிரவேச வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்லி உள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் புஜாரா 3வது இடத்தில் நங்கூரமாக விளையாடியதாலயே 4வது இடத்தில் விராட் கோலி நிறைய ரன்கள் குவித்ததாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு நிகராக புஜாராவும் இந்திய டெஸ்ட் அணிக்கு பங்காற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ புஜராவுக்கு எந்த கவனமும் கிடைப்பதில்லை. அனைத்து கிரிக்கெட்டர்களுக்கும் கவனம் கிடைப்பதில்லை. அதற்காக அவர்களுடைய பங்களிப்பு குறைவானது என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் நம்பினாலும் இல்லையென்றாலும் புஜாரா 3வது இடத்தில் கொடுத்த பங்களிப்புதான் விராட் கோலி நிறைய ரன்கள் அடிப்பதற்கு மிகப்பெரிய கருவியாக இருந்தது. நீங்கள் கேம் ஆப் த்ரோன்ஸ் பார்த்திருந்தால், அதில் ஒரு வைட் வாக்கர் கதாபாத்திரம் உள்ளது. நான் புஜாராவை ஒரு வைட் வாக்கர் என்று அழைத்தேன். அவர் மெதுவாக ரன் அடித்தாலும் ஒருபோதும் களத்தை விட்டு வெளியேற மாட்டார்” என்று கூறினார்.
English Summary
Pujara is a key reason for him scoring a lot of runs Praise from the former player