தாலிகட்டிய அடுத்த நொடியே மணமகனை சாட்டையால் அடித்த குடும்பத்தினர் - நடந்தது என்ன?
family members attack groom with whip after tying mangalyam in andira
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே குலத்தின் திருமணத்தில் மணமகனை 3 முறை கருப்பு சட்டையால் அடித்தால் மட்டுமே திருமணம் முழுமை அடைந்ததாக கருதப்படுகிறது. அதாவது மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் மணமகனின் குடும்ப உறுப்பினர்கள் மாப்பிள்ளையை கருப்பு சாட்டையால் அடிக்கும் வழக்கம் உள்ளது.
அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புச்சுபல்லே குலத்தினர் கங்கம்மா கோவிலில் இருந்து ஒரு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 5 கருப்பு சாட்டைகளை கண்டனர். அவர்கள் உடனடியாக கோவிலுக்கு சென்று எதோ தவறு நடந்துவிட்டது என்று கூறி தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டார்கள். அவர்கள் கனவில் கங்கம்மா தோன்றி உங்கள் குலத்தின் திருமணத்தின்போது மணமகனை கருப்பு சாட்டையால் 3 முறை அடிக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து காலம் காலமாக திருமணத்தின்போது மாப்பிள்ளையை சாட்டையால் அடிக்கும் வினோத சடங்கு செய்து வருகின்றனர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் மாப்பிள்ளையை சாட்டையால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
பத்ரம்பள்ளி தொண்டூர், இனங்களூர் லோமட புச்சி பள்ளே போடிவாரி, பள்ளே மல்லேலா, அகதூர், சந்த கோவூர் ஆகிய கிராமங்களில் புச்சுப்பள்ளே குலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.
English Summary
family members attack groom with whip after tying mangalyam in andira