மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம்; மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது, அமெரிக்கா - இஸ்ரேல் உடன் இணைந்து தாக்குதல் நடத்தியதில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதன்படி, தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர். 60 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற நாடுகள் மீது அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

"ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்றும் வரும் சமீபத்திய நிகழ்வால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பதற்றங்களை தணிக்கவும், அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்கவும் உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடரப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India says it is concerned by recent events in the Middle East


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->