பாகிஸ்தானின் அரையிறுதி கனவை சுக்கு நூறாக்கிய இலங்கை; ஒரு டி20 உலகக் கோப்பையில் 02 சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ஃபர்கான்..!
Sri Lanka crushes Pakistans semi final dream
10 வது டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 08 சுற்று போட்டியில் மூன்றாவதாக தகுதி பெரும் அணிக்காக பாகிஸ்தான் அணியும், ஆறுதல் வெறிக்காக இலங்கை அணிக்கும் இடையிலான 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில், பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 08 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது.
அணியின் சார்பில் பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி 20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ஃபர்ஹான் படைத்துள்ளார்.

கடந்த 2014 டி20 உலக கோப்பையின் போது விராட் கோலி 319 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஃபர்ஹான் 351* ரன்கள் அடித்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
அடுத்ததாக பகர் சமான் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். 15 வரகள் வரை சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்து அடுத்து சரிய தொடங்கின. இலங்கை அணி, சார்பில் மதுஷனகா 03 விக்கெட்டும், கேப்டன் தசுன் ஷனகா 02 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில், இலங்கை அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதி செல்ல முடியும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 145 ரன்களைக் கடந்ததால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோயுள்ளது.
இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரிந்தன. அடுத்த வந்த பவன் ரத்நாயக்க அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. அணியின் கேப்டன் தசுன் ஷனக கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியத்தில், 31 பந்தில் 08 சிக்சர், 02 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 06 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் பாகிஸ்தான் 05 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின், சஹிப்சதா பர்கான் 60 பந்தில் 100 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் இது அவருடைய 02-வது சதமாகும். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பையில் 02 சதம் விளாசிய முதல் வீரர்கள் சாதனையை ஃபர்கான் படைத்துள்ளார்.
English Summary
Sri Lanka crushes Pakistans semi final dream