அயதுல்லா காமேனி கொல்லப்பட்டுள்ளாரா..? ஈரான் வெளியுறவு அமைச்சரின் நிச்சயமற்ற பதில்; சர்வதேச செய்திகள் சொல்வது என்ன..? - Seithipunal
Seithipunal


அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து நேற்று  காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் நடத்திய தாக்குதல்கலில் தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 57 சிறுமிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் இந்த வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், தெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. அதற்கு முன்னதாகவே அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் கமேனியின் நிலை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர், அப்பாஸ் அரக்சி NBC நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;

"எனக்குத் தெரிந்தவரை கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார்" என்று நிச்சயமற்ற பதில் கூறியுள்ளதால்,  கமேனியின் உயிருடன் உள்ளாரா என்பது குறித்த சந்தேகங்கள் வலுத்துள்ளன. 

அத்துடன், தனது சமூக வலைதள பக்கத்தில், அப்பாஸ் அரக்சி "தெற்கு ஈரானில் உள்ள பள்ளி பட்டப்பகலில் தாக்கப்பட்டது. அப்பாவி குழந்தைகள் இறந்தனர். இதற்கு பதில் கிடைக்காமல் போகாது" என்று சேதமடைந்த பள்ளியின் படத்தை பகிர்ந்து  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படம், தெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகம், இல்லம் அமைந்துள்ள வளாகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதை கட்டியுள்ளதால் கமோனி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Has Ayatollah Khamenei been killed


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->