மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்; 14 ராணுவ தளங்கள் மீது தாக்குதல்: 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இன்று காலை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 51 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளியில் சுமார் 170 பெண் மாணவிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 100- க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, புர்ஜ் கலிபாவில் இருந்து சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை பீதியடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran claims to have killed more than 100 US soldiers in attacks on 14 military bases


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->