ஒருவழியாக இலங்கை முன்னாள் அதிபருக்கு கிடைத்தது ஜாமீன்..தொண்டர்கள் கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


தனிப்பட்ட பயணத்திற்காக அரசின் நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு  கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

 2023ஆம் ஆண்டு இலங்கையில் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொண்டிருந்தார் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே.  லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் தனது மனைவிக்காக கலந்து கொண்டார். 

இதில் தனிப்பட்ட பயணத்திற்காக அரசின் நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. லண்டன் பயணத்தின்மொத்தம் 17 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் லண்டன் பயணத்திற்கான செலவை தனது மனைவிதான் முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறு பரப்பும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருந்தார்.

இந்நிலையில் சிஐடி விசாரணைக்கான ரணில் விக்கிரமசிங்கே நேரில் ஆஜராகுமாறு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து 22ஆம் தேதி காலை நேரில் ஆஜரானார். விசாரணை நடந்து முடிந்த நிலையில் அன்றைய தினமே ரணில் கைது செய்யப்பட்டார். அவரை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.இதையடுத்து  சிறையில் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், ஜாமீன் வழங்கி அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால், ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In one way the former President of Sri Lanka has obtained bail supporters celebrate


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->