நலப்பணித்திட்டத்தில் சிறப்பான சேவை..தண்ணார்வ தொண்டர்களுக்கு விருது வழங்கிய அழகப்பா பல்கலைக்கழகம்!
Special service in the welfare project Award given to water volunteers by Alagappa University
அழகப்பா பல்கலையில் நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக சேவை புரிந்த அதிகாரிகள் மற்றும் தண்ணார்வ தொண்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கான விருது வழங்கும் விழா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு கூட்டரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி இந்நிகழ்விற்கு தலைமை ஏற்று பேசுகையில், அழகப்பா பல்கலைக்கழக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமன்றி இணைப்புக் கல்லூரிகளிலும் நிறைய மரங்கள் நடப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக சேவை புரிந்த அதிகாரிகள் மற்றும் தண்ணார்வ தொண்டர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ தொண்டர்கள் தாங்கள் சார்ந்த சுற்றுச்சூழலை பேணிகாப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அ.செந்தில்ராஜன் முன்னிலை வகித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா.சு.ராஜாராம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பேரா.எம்.சுந்தர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பல்கலைக்கழக மாணவர் விடுதி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் துணைவேந்தர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அ.செந்தில்ராஜன், தேர்வாணையர் முனைவர் எம்.ஜோதிபாசு, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பேரா.வெ.பழனிச்சாமி, பேரா.சு.ராஜாராம், தொலைதூரக் கல்வி இயக்குநர் முனைவர் எ.கண்ணபிரான், முதன்மை விடுதிக் காப்பாளர் பேரா.ஆறு.சரவணக்குமார், வளாக ஒருங்கிணைப்பாளர் பேரா.சு.ஆறுமுகம், அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.நடராஜன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Special service in the welfare project Award given to water volunteers by Alagappa University