ஒன்றிய, மாநில அரசுகள் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு,  நாய்க்கடிக்கு ஆளாகி ரேபிஸ் போன்றகொடிய நோயால் பலரும் மரணத்தை தழுவிக்கின்றனர். இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து, அனைத்து தெருநாய்களையும் காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது. அதன் பின்னர் விலங்கு நல ஆர்வலர்களின் தொடர் போராட்டம் காரணமாக, நீதிமன்ற  உத்தரவில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாய்க்கடி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:

'இந்தியாவில், நகர்ப்புறமோ, கிராமப்புறமோ, நாய்கள் மனிதர்களுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளன. நாய்கள் தினத்தில், நாய்களையும், அவற்றைப் பராமரிப்பவர்களையும் வாழ்த்துகிறோம். தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாய்க்கடி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து தற்போது கவலைகள் எழுந்துள்ள நிலையில், நாய்க்கடி ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. 

ஒன்றிய, மாநில அரசுகள் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் காப்பகங்கள் அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பையும், விலங்கு நலனையும் உறுதி செய்ய வேண்டும். நாய்கள் நமது உயிரினக் குடும்பத்தின் ஒரு பகுதி. தெரு நாய்களை அழிக்காமல், கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மூலம் பாதுகாப்போம். மனிதநேயத்துடன் இந்த உயிரினத்தைக் காப்போம்.'என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Union and state governments should intensify sterilization and vaccination programs for street dogs says DMDK General Secretary Premalatha


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->