நேருக்கு நேர் மோதிய கார் - பஸ் : 7 பேர் பலி; 17 பேர் படுகாயம்.!!
seven peoples died for accident in punjab
பஞ்சாப்பில் அரசு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று காலை பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து தசுஹா-ஹாஜீபூர் சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் பேருந்தை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
seven peoples died for accident in punjab