திருமணத்தை மீறிய உறவு..மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் காவல்நிலையத்தில் சரண்!
A relationship that violated marriage the husband took refuge in the police station after killing his wife
திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரை கணவரே கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் கோமதி( 28) இவர் திருநின்றவூர் நகராட்சி 26-ஆவது வார்டு கவுன்சிலராகவும் திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மேனாக இருந்து வந்தார். .இவரது கணவர் ஸ்டீபன்ராஜ் (35) இவர் திருநின்றவூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக உள்ளார். இருவரும் காதலித்து திருமணமாகி 10 வருடத்திற்கு மேலான நிலையில் 4 ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கோமதிக்கு தனது ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து பலமுறை கணவர் ஸ்டீபன்ராஜ் மனைவி கோமதியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று திருநின்றவூர் அடுத்த நடு குத்தகை ஜெயராம் நகர் பகுதியில் நண்பருடன் கோமதி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஸ்டீன்ராஜ் நேரில் சென்று மனைவி கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி செல்ல தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கோமதியை சரமாரியாக தலை, முகம், கழுத்து என வெட்டியுள்ளார்.இந்த தாக்குதலில் மனைவி கவுன்சிலர் கோமதியின் கை துண்டானது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஸ்டீபன்ராஜ் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தகவல் அறிந்த உதவி ஆணையர் கிரி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணத்தை மீறிய உறவை கணவர் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருநின்றவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A relationship that violated marriage the husband took refuge in the police station after killing his wife