அப்டேட் கொடுத்த அபியங்கர்! விரைவில் கருப்பு பட டீசர்...!
Abhiyaankar gives an update Black film teaser coming soon
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் 'சூர்யா'. இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுவாசிகா, இந்திரன்ஸ், சுப்ரீத் ரெட்டி,யோகி பாபு, ஷிவாதா, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் 'சாய் அபியங்கர்' இசையமைக்கிறார்.அதுமட்டுமின்றி, இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, 'கருப்பு' படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
அதாவது, 'கருப்பு படத்தின் டீசர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ந் தேதி வெளியாகும்' என்று தெரிவித்தார். மேலும், இது ஒரு சிறந்த படம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Abhiyaankar gives an update Black film teaser coming soon