திருச்செந்தூர் குடமுழுக்கு - ட்ரோன் மூலம் புனித நீர் தெரளிக்க ஏற்பாடு.!!
drones arrangements for holy water sprinking in thiruchenthur kumbabhishegam
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திங்கட்கிழமை காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று மதியம் 12:00 மணியோடு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது.
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 25 இடங்களில் மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் நடக்கும்போது முக்கிய பிரமுகர்கள் உட்பட 1,200 பேர் மட்டுமே கோவிலுக்கு மேல் பகுதியில் அனுமதிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் இருந்து அய்யா கோவில் வரை கடற்கரையோரம் பக்தர்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. அதனை மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மொத்தம், 20 இடங்களில் பெரிய அளவிலான ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
English Summary
drones arrangements for holy water sprinking in thiruchenthur kumbabhishegam