'சீதா ராமம்' புகழ் ஹனு ராகவப்புடி - பிரபாஸ் கூட்டணி படத்தின் அப்டேட் நாளை..!
Hanu Raghavapudi and Prabhas collaboration film update tomorrow
'சீதா ராமம்' புகழ் இயக்குனர் ஹனு ராகவப்புடி பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் அப்டேட் பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
நாளை காலை 11.07 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 230-ஆம் தேதி காலை 11.07 மணிக்கு டைட்டில் போஸ்டர் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஃபௌஜி (Fauji) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகச் கூறப்படுகிறது. ஆனால், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆக, நாளை படத்தின் டைட்டில் தெரிந்துவிடும்.
போரின் அர்த்தத்தையே மாற்றிய ஒரு மனிதர். அவர் ????? என்று அழைக்கப்படுகிறார். #பிரபாஸ்ஹானுவின் விளக்கம் நாளை தொடங்குகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' 2026 ஜனவரி 09-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் 'சலார் '’ மற்றும் 'கல்கி 2' போன்ற படங்களில் இருந்து ஏதாவது அறிவிப்பு வருமா என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
Hanu Raghavapudi and Prabhas collaboration film update tomorrow