இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா..? வங்கதேசம் வெளியுறவத்துறை அமைச்சகம் விளக்கம்..!
Explanation on the news that 10 agreements signed with India during Sheikh Hasinas tenure as Bangladesh Prime Minister have been cancelled
நமது அண்டைய நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது முகமது யூனுஸ் தலைமையில் அந்நாட்டில் இடைக்கால அரசு அமைந்தது. வரும் 2026 மார்ச் மாதத்தில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஷேக் ஹசீனா பதவி விலகியதை தொடந்து, இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது. இந்தியாவுடன் வங்கதேசம் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பட்டியல் சரியானது அல்லது என தற்போதைய வங்கதேசம் வெளியுறவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு விவகார ஆலோசகர் எம். தவுஹித் ஹொசைன் "ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக ஹொசைன் இருந்த போது "இந்தியாவிடம் இருந்து இழுவைப்படகு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்த பிறகு, வங்கதேசத்திற்கு இதனால் எந்த ஆதாயமும் இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Explanation on the news that 10 agreements signed with India during Sheikh Hasinas tenure as Bangladesh Prime Minister have been cancelled