ரஜினி மகளுக்கு நடந்த இரண்டாவது திருமணம்.. “வேத் வரும் வரை தாலி கட்டமாட்டேன்” – சௌந்தர்யா பகிர்ந்த உருக்கமான நினைவு
Rajinikanth daughter second marriage I wonot tie the talisman until Ved comes Soundarya shares a heartfelt memory
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். அந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.
இளைய மகள் சௌந்தர்யா முதலில் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனை பெற்றார். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக முதல் கணவரை பிரிந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விசாகனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மகளின் இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்த ரஜினிகாந்தை பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில், தனது திருமண நாளில் நடந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தை சௌந்தர்யா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது:
“எங்கள் திருமணத்தின் முகூர்த்த நேரம் வந்துவிட்டது. ஆனால் மண்டபத்தில் என் மகன் வேத் கிருஷ்ணா இல்லை. நான் உடனே அவன் வந்துவிட்டானா என்று கேட்டேன். அப்போது விசாகன் என்னைப் பார்த்து, ‘வேத் வரும் வரை நான் தாலி கட்டமாட்டேன்’ என்று சொன்னார். பிறகு வேத் வந்த பிறகுதான் அவர் என் கழுத்தில் தாலி கட்டினார்.
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். குழந்தைகளுக்கு எல்லாம் புரியும். அவர்களிடம் பொய் சொல்லவோ, போலியாக நடிக்கவோ முடியாது. விசாகன் தன்னை கவனித்துக்கொள்வார் என்று வேத் உணர்ந்தான். அவனுக்கு அந்த நம்பிக்கை கிடைத்தது. வேத் வந்த பிறகுதான் தாலி கட்டிய அந்த தருணத்தை நான் எப்போதும் மறக்கமாட்டேன்” என்று சௌந்தர்யா உருக்கமாக கூறினார்.
திரைப்படத் துறையில் சௌந்தர்யா தனது பயணத்தை டைட்டில் டிசைனர் ஆக தொடங்கினார். பின்னர் ‘கோவா’ படத்தை தயாரித்தார். தொடர்ந்து ‘கோச்சடையான்’, ‘விஐபி 2’ போன்ற படங்களை இயக்கினார். அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் சிறிது இடைவெளி எடுத்தார்.
தற்போது மீண்டும் தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளியான ‘வித் லவ்’ திரைப்படம் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சௌந்தர்யா தனது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
English Summary
Rajinikanth daughter second marriage I wonot tie the talisman until Ved comes Soundarya shares a heartfelt memory