மீஞ்சூரில் செயின் பறிப்பை தடுத்ததாக ஆத்திரம்; கல்லூரி மாணவியை வெட்டிய 04 போதை ஆசாமிகள் கைது..! - Seithipunal
Seithipunal


மீஞ்சூர் அருகே வல்லூர் ஊராட்சி, வாலாஜா தெருவை சேர்நத முகமது அஸ்கர் என்பவரின் மகள் 17 வயதான சவுமிய பாத்திமா, சென்னையில் ஒரு கல்லூரியில் 02-ஆம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தேர்வுக்காக சவுமிய பாத்திமா படித்து கொண்டிருந்த போது அவரது வீட்டுக்குள் 04 பேர் கஞ்சா போதையில் அத்துமீறி புகுந்தனர். 

அப்போது படித்துக்கொண்டு இருந்த மாணவியை 04 போதை ஆசாமிகளும், மீன் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பியோடினர். மாணவிக்கு பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்து இருந்த நிலையில், அவர் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தில் தப்பியோடிய 04 பேரில் ஒருவரை மடக்கி பிடித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீஞ்சூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்குதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கல்லூரி மாணவியை வெட்டிவிட்டு தப்பியோடிய 03 பேர் குறித்து தீவிரமாக விசாரனை நடத்தினர்.

மடக்கி பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் வல்லூரை சேர்ந்த ரோலக்ஸ் (எ) டில்லிபாபு (24) எனத் தெரியவந்தது. அவரிடம் தப்பியோடி 03 பேர் குறித்து விசாரணை நடத்தியதில், தப்பியோடிய 03 பேரும் அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலம் அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை அப்பகுதியில் மீஞ்சூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த 03 போரையும் விரட்டி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் வல்லூரை சேர்ந்த லோகேஷ் (22), சித்திக் (19), அத்திப்பட்டை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (24) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் 4 பேரும் கஞ்சா போதையில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கல்லூரி மாணவி சவுமிய பாத்திமா தடுத்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவரை மீன் வெட்டும் கத்தியால் சரமாரி வெட்டியதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட 04 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 Intoxicated Men Arrested for Hacking College Student Who Foiled Chain Snatching Attempt in Minjur


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->