நாயகியாக அறிமுகமாகும் வனிதாவின் மகள் ஜோவிகா: தெலுங்கில் முதல் படம் ‘அகாதா’!குவியும் வாழ்த்து!
Vanitha daughter Jovica to debut as a heroine First film in Telugu is Agaatha Kuvi also congratulates her
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளின் மகளான நடிகை வனிதா விஜயகுமார், தனது மகள் ஜோவிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகிறார். தற்போது ஜோவிகா கதாநாயகியாக நடிக்கும் முதல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
‘சந்திரலேகா’ படத்தின் மூலம் விஜய்யுடன் அறிமுகமான வனிதா, பின்னர் சில படங்களில் நடித்தாலும் திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகினார். பின்னர் மீண்டும் திரும்பி, ‘மிஸஸ் & மிஸ்டர்’ படத்தை இயக்கி புதிய முயற்சி மேற்கொண்டார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், காப்புரிமை பிரச்சனைகளையும் சந்தித்தது.
இந்நிலையில், வனிதாவின் மகள் ஜோவிகா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘அகாதா’ (Agadha) என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். ராஜு இயக்குகிறார். தனது முதல் பட வாய்ப்பை குறித்து ஜோவிகா சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
“எனது முதல் திரைப்படம் இது. அதுவும் எம்.எஸ். ராஜு போன்ற இயக்குநருடன் பணியாற்றுவது எனக்கு பெருமை. ‘தேவி’, ‘வர்ஷம்’, ‘ஒக்கடு’ போன்ற படங்களை பார்த்து வளர்ந்த நான், அவருடன் வேலை செய்வது கனவு நனவானது போன்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அம்மா வனிதாவுடன் ‘தேவி’ படத்தின் மூலம் இருந்த தொடர்பு தற்போது தனது அறிமுக படமாக தொடர்வது குறித்து நன்றியையும் தெரிவித்தார். “என்னில் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோவிகாவின் இந்த அறிமுகம் திரையுலகில் புதிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vanitha daughter Jovica to debut as a heroine First film in Telugu is Agaatha Kuvi also congratulates her