பிரபல பாடகரின் பரிதாப நிலை!.. தகவல் தெரிந்ததும் உதவிய KPY பாலா! மனம் நெகிழ வைக்கும் செயல்! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான KPY பாலா, சமூக உதவிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். மருத்துவ செலவு, கல்வி, சுயதொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக உதவி தேவைப்படுவோரிடம் நேரடியாக சென்று உதவி செய்வது அவரது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பின்னணி பாடகர் ரிச்சர்ட் டின்னுக்கு பாலா உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் காதல்’ படத்தின் ‘நங்கை’ பாடல், ‘ரெமோ’ படத்தின் ‘மீசை பியூட்டி’ போன்ற பாடல்களின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரிச்சர்ட்.

தற்போது உடல்நலப் பிரச்சனையால் பேசுவதற்கே சிரமப்படும் நிலையில் உள்ள அவரை, பாலா நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அவரின் மருத்துவ மற்றும் குடும்ப செலவுகளுக்காக ரூ.50,000 நிதியுதவியும் வழங்கினார்.

மேலும், ரிச்சர்ட்டுக்கு மற்றவர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று பாலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, பேச சிரமப்பட்டாலும், பாலாவின் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்ததாகவும், குறிப்பாக ‘கலக்கப்போவது யாரு’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிகளில் அவரது நகைச்சுவை தமக்கு பிடித்ததாகவும் ரிச்சர்ட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாலா உதவி வழங்கியபோது, ரிச்சர்ட்டின் குடும்பத்தினர் உணர்ச்சி வசப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திறமையான ஒரு பாடகர் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருவதுடன், பாலாவின் மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The plight of the famous singer KPY Bala helped after learning the information A heartwarming act


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->