புதுச்சேரி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; 11 வேட்பாளர்கள் போட்டி..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு யாரும் மனுவை வாபஸ் பெறாததால்,  களத்தில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வரும் அக்டோபர் 06-ஆம் தேதி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேதுசெல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி, இந்திய குடியரசு கட்சி சார்பில் கலைவாணன் மற்றும் 05 சுயேச்சைகள் என 11 பேர் போட்டியிடுகின்றனர்.

 கடந்த 17-ஆம் தேதி வேட்புமனு பரீசீலனை நடந்த நிலையில், நேற்று மாலை 03 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். ஆனாலும், யாரும் வாபஸ் பெறவில்லை. அதன்பின் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11 candidates to contest the Thattanchavady by election in Puducherry


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->