டி20 உலகக் கோப்பை: சை தேஜா முக்காமல்லா அதிரடி; சர்மீத் சிங் பந்தில் சுருண்ட நெதர்லாந்து; 93 ரன்களில் வென்று, முதல் வெற்றியை பதிவுசெய்த அமெரிக்கா..! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பையில் 21 வது போட்டியில்,  'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 07:00 pm மணிக்கு இந்த போட்டி ஆரம்பித்தது.போட்டியில் முதலில் களம் இறங்கிய அமெரிக்கா அணி, 06 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.  அணியின் சை தேஜா முக்காமல்லா அபாரமாக ஆடி, 51 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுபம் ரஞ்சனே அதிரடியாக விளையாடி 24 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். 

மறுபுறம் நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 03 விக்கெட் வீழ்த்தினார். 197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி, ஆரம்பம் முதலே சொதப்பியது. அமெரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அணியின் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தனர். பாஸ் டி லீட் அதிகபட்சமாக 23 ரன்களும் , கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 20 ரன்கள் அடித்தனர்.

இறுதியில் நெதர்லாந்து அணி, 15.5 ஓவரில், சாக்ளா விக்கெட்டுகளையும் இழந்து, 103 ரன்கள் மாத்திரமே எடுத்தது. இதன் காரணமாக, அமெரிக்கா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அமெரிக்க அணி சார்பில் சர்மீத் சிங் 04 விக்கெட்டும், வான் ஸ்கால்வைக் 03 விக்கெட்டும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக சர்மீத் சிங் தேர்வு செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

USA won by beating Netherlands by 93 runs


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->