'எவ்வாறான அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார்'; விஜய்யை தரக்குறைவாக பேசியதற்கு நாஞ்சில் சம்பத் பதிலடி..! - Seithipunal
Seithipunal


சேலம், சீலநாயக்கன்பட்டியில், தவெக தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பேசிய  விஜய், என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறதா? அதற்கு அவர்களுக்கு திராணி இருக்கிறதா..? என்று சவால் விடுத்து பேசியிருந்தார். அத்துடன், காலத்தில் திமுக மற்றும் தவெக இடையில் தான் போட்டி என்றும் பாஜக அதிமுக கூட்டணியையும் ஏனைய எதிர்க்கட்சிகளும் களத்திலேயே இல்லை என்று பேசி இருந்தார்.

அதன் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

விஜய் அனுபவமே இல்லாதவர், முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரட்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும், நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும், வீட்டிலிருந்து வெளியே அவர் வரவேண்டும் என்று விஜய்யை விமர்சித்து பேசி இருந்தார். அத்துடன், கூட்டம் சேர்ந்தால் எல்லாம் ஓட்டாகுமா..? விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா..? என்றும் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் விஜய் பற்றி பேச அவர் ஒரு ஆளே இல்லை என்று விரசித்து பேசி இருந்தார்.

இந்நிலையில், விஜய்யை திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும் என தரக்குறைவாக விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரனுக்கு, தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்; முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nanjil Sampath retorts that Nayinar Nagendran has lost even basic knowledge of politics


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->