லூதியானாவில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்...! வீட்டில் தனியாக இருந்த பச்சிளம் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை...! - 35 வயது நபர் கைது..!
shocking incident Ludhiana young child who alone at home harassment 35 year old man arrested
பஞ்சாப் மாநிலத்தில், தாய் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 11 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக 35 வயது நபரை காவலர்கள் கைது செய்தனர். பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த இந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள டெஹ்லான் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் அப்பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்தார். திருமணமான அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று குழந்தையின் தாய் வேலைக்குச் செல்வதற்கு முன்பு, தனது 11 மாத குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதனை கவனித்த அந்த நபர், குழந்தை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.தாய் வேலைக்குச் சென்றதைத் தொடர்ந்து, வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் பச்சிளம் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை இழைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்துக்குப் பிறகு குழந்தையின் அழுகுரல் கேட்டதால் பதற்றமடைந்த தாய், உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது குழந்தை ரத்தப்போக்குடன், ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.இதையடுத்து, குழந்தையின் குடும்பத்தினர் காவலர்களிடம் புகார் அளித்தனர்.
மேலும், சம்பவத்துக்குப் பிறகு அந்த நபர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றதை தான் பார்த்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவலர்கள், குற்றத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதுகுறித்து விசாரணை அதிகாரி குர்மீத் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்தார்.
English Summary
shocking incident Ludhiana young child who alone at home harassment 35 year old man arrested