கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் பரபரப்பு...! நாளை விஜயவாடா செல்கிறார் முதல்வர் விஜய்...! - சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் அதிரடி பேச்சுவார்த்தை...!
Tensions rise over Krishna river water issue Chief Minister Vijay to visit Vijayawada tomorrow Chandrababu Naidu Pawan Kalyan to hold talks
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் தமிழகத்துக்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, முதல்-அமைச்சர் விஜய் நாளை (13-ந் தேதி) விஜயவாடா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீரை வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு கடந்த 9-ந் தேதி வரை தமிழகத்துக்கு 2.251 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

இதனால், ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கிடையே, தமிழகத்துக்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டவும் ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து ஆலோசிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக விஜயவாடா செல்லும் முதலமைச்சர் விஜய், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது தமிழகத்துக்கு உரிய நதிநீரைப் பெறுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tensions rise over Krishna river water issue Chief Minister Vijay to visit Vijayawada tomorrow Chandrababu Naidu Pawan Kalyan to hold talks