மனைவிக்கு சாட் செய்த வாலிபர் மீது வெறித்தன தாக்குதல்...! கணவர் உள்பட 4 பேர் அதிரடி கைது...! - ஈரோட்டில் அரங்கேறிய பரபரப்பு...!
young man attacked for chatting with his wife 4 people including husband arrested crackdown commotion unfolded Erode
மனைவிக்கு சமூக வலைதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறி வாலிபரை நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய கணவர் உள்பட 4 பேரை காவலர்கள் கைது செய்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்ராஜ் (34). சரக்கு வாகன ஓட்டுனரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சமூக வலைதளம் வாயிலாக தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு கோகுல்ராஜ் குறுஞ்செய்திகள் அனுப்பி வந்ததாகவும், இதனால் அவர் தொந்தரவுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி அறிந்த பெண்ணின் கணவர் தேவராஜ், கோகுல்ராஜை நேரில் அழைத்து கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் ஆத்திரமடைந்த தேவராஜ், தனது நண்பர்களான நந்தகுமார் (19), பிரசாந்த் (23), தரனேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து கோகுல்ராஜை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.செந்திலின் மகனான நந்தகுமார், குழந்தை ராசுவின் மகனான பிரசாந்த், கோபாலின் மகனான தரனேஷ் ஆகியோர் தேவராஜுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கோகுல்ராஜுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வலி தாங்க முடியாமல் அவர் அலறியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோகுல்ராஜின் தந்தை சிவராஜ், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டதாக தேவராஜ், நந்தகுமார், பிரசாந்த், தரனேஷ் ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
young man attacked for chatting with his wife 4 people including husband arrested crackdown commotion unfolded Erode