சென்னையில் மெட்ரோ தொடக்க விழாவில் அதிர்ச்சி...! மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட இளைஞர் அதிரடி கைது!
Shock at metro inauguration ceremony in Chennai Youth arrested releasing black balloons protest against Modi visit
சென்னையில் புதிய மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டதாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, போரூரில் இருந்து பூந்தமல்லி வரை இருவரும் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டனர்.பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முக்கிய சாலைகள், ரெயில் நிலையங்கள் மற்றும் விழா நடைபெறும் பகுதிகளில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்த சூழலில், பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் பயணம் செய்த மெட்ரோ ரெயில் பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் இருந்து திடீரென கருப்பு பலூன்கள் கொத்தாக வானில் பறக்கவிடப்பட்டன.இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று கருப்பு பலூன்களை பறக்கவிட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆவடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என்பது தெரியவந்தது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Shock at metro inauguration ceremony in Chennai Youth arrested releasing black balloons protest against Modi visit