'கூட்டம் இருந்தால் என்ன..? ஓட்டு வேண்டாமா..? அவரால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது'; விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ள நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


காவல்துறையின் கடுமையாக நிபந்தனைகளுக்கு பிறகு, நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தி.மு.க., அ.தி.மு.க. குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார், சேலம் மாநாட்டில் விஜய் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், விஜய் தனக்கு ஒரு ஆளே இல்லை. அவர் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், த.வெ.க சார்பில் சேலத்தின் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காவல்துறையின் கடுமையாக நிபந்தனைகளுக்கு பிறகு, நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது  மக்கள் மத்தியில் பேசிய விஜய், தி.மு.க., அ.தி.மு.க. குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். 

அதாவது, அடுத்தவர் தொடங்கிய கட்சியில், அவர் முகவரியை வைத்துக்கொண்டு அவர்களின் கொள்கைகளை மறந்துவிட்டீர்கள் என்றும், நீங்கள் தனியாக கட்சி தொடங்கி ஒரு சதவீதம் ஓட்டு வாங்கி காட்டுங்கள் என்று சவால் விடுத்து பேசினார். அத்துடன், உங்களுக்கு திராணி இருந்தால் அப்படி செய்யுங்கள். எங்களுக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை என்று மிகவும் காரசாரமாக பேசியிருந்தார்.

அத்துடன், சுட்டு போட்டாலும் எங்களுக்கு கொள்ளையடிப்பது வராது என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அரசியல் கட்சினர் அனைவரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, விஜய் முதலில் வெளியில் வர வேண்டும் என்றும்,  வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குடும்பத்தோடு நல்ல உறவு இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கம் என்று வெளியில் சொல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர், எப்படி, 32 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள்.. ?இது எப்படி முடியும். நடிகர் என்பதால் இப்படி நடக்குமா? என்று கிண்டலாக பேசியுள்ளார்.

மேலும், ஒரு குடும்பஸ்தானாக வந்து கட்சியை நடத்த வேண்டும் என்றும், போட்டி என்று வந்தால் நான் அவரை பற்றி பேசவில்லை எனக்கு அவர் ஒரு ஆளே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டம் இருந்தால் என்ன..? விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? என்று பேசியுள்ளார்.

மேலும், நானும் ஆஞ்சிநேயர் மாதிரி மலையை தாண்டுவேன் என்று நம்பிக்கை வைக்கலாம். ஆனால் முடியுமா..? அவர் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்று நயினார் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran has responded by saying that Vijay cannot win even a single seat


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->