‘கருப்பு’ வெற்றிக்கு ஆர்.ஜே. பாலாஜியை பாராட்டிய ரஜினிகாந்த்! ஆர்.ஜே.பாலாஜியிடம் ரஜினி சொன்ன விஷயம்! போட்டுடைத்த ஆர்.ஜே.பாலாஜி! - Seithipunal
Seithipunal


சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் பணியாற்றிய கலைஞர்களை நேரடியாக அழைத்து வாழ்த்தும் பழக்கம் கொண்டவர் ரஜினிகாந்த். இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை பாராட்டுவதில் அவர் எப்போதும் தனித்துவமாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வரிசையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜிக்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “என் படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் ஒருநாள் என்னை அழைத்து பாராட்ட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அந்த ஆசை தற்போது நிறைவேறியது. அவர் என்னை நேரடியாக தொலைபேசியில் அழைத்தார்” என்றார்.

மேலும், “பாலாஜி சூப்பர்... சூப்பர்... சூப்பர்... சாதிச்சிட்டீங்க. எவ்வளவு பெரிய ஹிட். சீக்கிரமே சந்திப்போம் என்று அவர் கூறினார். அந்த ஒரு பாராட்டு எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. இன்னொரு கனவு நிறைவேறிய உணர்வு ஏற்பட்டது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

‘கருப்பு’ திரைப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு ஒரு பெரிய வர்த்தக வெற்றி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

இதற்கிடையில், ‘கருப்பு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் திரையுலகில் தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வெற்றியையும் பெற்றுள்ள ‘கருப்பு’ திரைப்படம், சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவரின் திரைப்பயணத்திலும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth praised RJ Balaji for the success of Karuppu What Rajini said to RJ Balaji RJ Balaji was impressed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->