'NDA கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்'; ராஜாஜி- அண்ணா தேர்தல் வியூகத்தை சுட்டிக்காட்டிய தமிழிசை சவுந்தரராஜன்..!
Tamilisai Soundararajan pointed out the Rajaji and Anna election strategy by saying that Vijay should join the NDA alliance
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தல், எதிர், எதிர் கட்சிகளை விமர்சிப்பது, தாக்கி பேசுவது, கூட்டணி அமைப்பது, அரசியல் ராஜதந்திரங்கள் என கலைக்கட்டியுள்ளது.
இந்த நிலையில், சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் "தேர்தல் கூட்டணி" என்ற கணக்கை 1967- இல் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கிற்காக, தனது பரம எதிரியாகக் கருதப்பட்ட ராஜாஜியுடன் அண்ணா கைகோர்த்ததை சுட்டிக்காட்டி, தவெக விஜய்க்கு NDA கூட்டணியில் இணைய தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், காங்கிரஸில் இருந்து பிரிந்து 1959-இல் சுதந்திரா என்ற தனிக் கட்சியை தொடங்கிய ராஜாஜி, காங்கிரஸை வீழ்த்த கங்கணம் கட்டியிருந்தார். அந்த நேரத்தில்தான் காங்கிரஸை வீழ்த்த ராஜாஜியுடன் கைக்கோர்த்தது அண்ணா தலைமையிலான திமுக அணி.
மேலும், ''பிராமண எதிர்ப்பு" பேசிய திமுகவும், "திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று சொன்ன ராஜாஜியும் இணைந்த அந்தப் புள்ளிதான், சுதந்திரத்திற்குப்பின், கொள்கையை கடந்து தமிழகத்தில் உருவான முதல் தேர்தல் கூட்டணியும் இதுவாகும்.

இந்த அண்ணாவின் தேர்தல் கூட்டணி வியூகத்தை போன்று, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார் . திமுக எனும் பலமான சக்தியை வீழ்த்த வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கக் கூடாது என்றும், விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த போதிலும், ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால், நாம் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது? என்று அண்ணா கேட்டதையும் நினைவில் கொள்ளத்தக்கது.
ஆகையால், ராஜாஜியுடன் அன்று அண்ணா அமைத்த கூட்டணி, தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணியாகப் பார்க்கப்படவில்லை. அது வலுவான கூட்டணியாகவே அரசியல் நோக்கர்கள் பார்த்தனர்.
English Summary
Tamilisai Soundararajan pointed out the Rajaji and Anna election strategy by saying that Vijay should join the NDA alliance