T20 World Cup 2026; ஜிம்பாப்வே அணியில் சேர்க்கப்பட்டுள்ள சாம் கரன் சகோதரர் பென் கரன்..!
Sam Currans brother Ben Curran included in Zimbabwe team
10 வது, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் குரூப் B பிரிவில், ஜிம்பாப்வே அணி 02 போட்டிகளில் விளையாடி 02 போட்டியிலும் வெற்றி பெற்று, 02-வது இடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் Brian Bennett அதிரடி ஆட்டம் மற்றும் Blessing Muzarabani யின் சிறந்த பந்து வீச்சில் 23 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது.
பல உலக சாம்பியன்களை வென்றுள்ள ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நட்சத்திர வீரர்களான சாம் கரண் மற்றும் டாம் கரண் ஆகியோரின் சகோதரரான பென் கரண் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்டரான பிரெண்டன் டெய்லருக்கு பதிலாக பென் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணி தனது முதல் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிரண்டன் டெய்லர் (40 வயது) தற்போது தசைப் பிடிப்பு காரணங்களால் விலகியுள்ளார்.
கடந்த 2004-இல் அறிமுகமான பிரண்டன் டெய்லர் இதுவரை 36 டெஸ்ட், 207 ஒருநாள், 59 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன், பென் கரண் நல்ல ஆல்ரவுண்டர் என்பதால், ஜிம்பாப்வே அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்ப்பார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Sam Currans brother Ben Curran included in Zimbabwe team