சவுதி விமான நிலையத்தின் மீது தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு; 08 பேர் காயம்; தூதரக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரையும் வெளியேற உத்தரவிட்டுள்ள அமெரிக்கா..! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட்டுள்ளதோடு,08 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆனால், இந்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப நாட்களாக சவூதி விமான நிலையங்கள் மீது எரிபொருட்களை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர். பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளமை கவனிக்க தக்கது.

ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த செப்டம்பர் முதல் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் அரச படைகளுக்கு ஆதரவாக செயல்படும் அண்டை நாடான சவுதி மீது ஹவுதிக்கள் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, சவுதியின் ஷைபா எண்ணெய் வயல் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்ததாக சவுதியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. தற்போது அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதுடன், தேவையான உதவிகளையும் உறுதிசெய்து வருகிறதாக கூறப்படுகிறது.  இதனால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்க தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One person killed and 8 injured in an attack on a Saudi airport


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->