''அவர் கொடுத்த முத்தம்தான் மிகவும் மோசமானது''; '' பாம்பு கூட இவரை விட நன்றாக முத்தமிட்டது''; மாறி மாறி விமர்சித்த நடிகர்கள்; முடிவுக்கு வந்ததா முத்த போர்..?
Has the kissing feud between actress Mallika Sherawat and actor Emraan Hashmi come to an end
தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் சரியாக முத்தமிட மாட்டார் என நடிகர் இம்ரான் ஹாஸ்மி விமர்சித்துள்ளமை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் படமான 'அன்பெய்த்ஃபுல்' கதையை தழுவி 'மர்டர்' என்ற படம் பாலிவுட்டில் எடுக்கப்பட்டு, கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி, நடிகை மல்லிகா ஷெராவத் மற்றும் நடிகர் அஷ்மித் படேல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற நெருக்கமான முத்தக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு. இருவரையும் ஒரே இரவில் முன்னணி நட்சத்திரங்களாக மாற்றியது.
ஆனால், அந்த படப்பிடிப்புக்கு பின்னர் இருவருக்கும் இடையே முறுகல் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் இம்ரான் ஹாஸ்மி, ''தான் திரையில் நடித்ததிலேயே மல்லிகா ஷெராவத்துக்கு கொடுத்த முத்தம்தான் மிகவும் மோசமானது என்றும், ஹாலிவுட்டில் ஜெயிக்க மல்லிகாவின் படுக்கையறையில் முட்டாள்களுக்கான வழிகாட்டி புத்தகம் மட்டுமே இருக்கும்.'' என்றும் கடுமையாக சாட்டியிருந்தார். அதற்கு பதிலடியாக 'ஹிஸ'’ திரைப்படத்தில் தான் முத்தமிட்ட பாம்பு கூட இவரை விட நன்றாக முத்தமிட்டது' என மல்லிகா ஷெராவத் கூறினார்.
இந்நிலையில் இந்த பழைய மோதல் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய மல்லிகா ஷெராவத், 'பட விளம்பரத்தின் போது எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகள் பேசாமல் இருந்து விட்டோம். இப்போது திரும்பிப் பார்த்தால் அது மிகவும் குழந்தைத்தனமான செயலாக தோன்றுகிறது. எனது பக்கமும் தவறு இருந்தது. இம்ரான் ஹாஸ்மி மிகவும் அன்பான மற்றும் சிறந்த நடிகர். அவருடனான தொடர்பை இழந்தது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது' என்று கூறி பழைய பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
Has the kissing feud between actress Mallika Sherawat and actor Emraan Hashmi come to an end