பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்; சென்னை மெட்ரோ..! - Seithipunal
Seithipunal


பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையே வழித்தடம் 04-இல் (மஞ்சள் வழித்தடம்) இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (அக். 21) அறிவித்துள்ளது.

அதன்படி, பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையே வழக்கமாக காலை 07.00 மணிக்குத் தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை வரும் அக். 23 முதல் காலை 06.00 மணிக்கு  தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரொ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-11 வழித்தடம் 04-இல், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் 2026, அக்டோபர் 11 ஆம் தேதி மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது.

இச்சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வழித்தடம் 4-இல் ரயில் சேவை தொடங்கும் நேரத்தை 2026, அக்டோபர் 23 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6.00 மணியாக மாற்றியமைப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

இந்த நேரமாற்றம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு, வடபழனி மற்றும் பூந்தமல்லி நோக்கி அதிகாலைப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2026, அக்டோபர் 23, முதல் 15 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடத்தின் இரு திசைகளிலும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வழக்கமான மெட்ரோ இரயில் பயணிகள் சேவை இயக்கப்படும்.

பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 04-இன் வடபழனி மெட்ரோ ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் சேவை இரவு 09.00 மணிக்கு இயக்கப்படும். எனவே, பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவை நேரத்தைக் கவனத்தில் கொண்டு, தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.''என்று குறிப்பிடப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Change in operating hours for the Poonamallee to Vadapalani Metro rail service


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->