ஒரே நாளில் 5 தங்கம் உள்பட 27 பதக்கங்களை வென்று 62 பதக்கங்களுடன் 05 இடத்தில் இந்தியா..! - Seithipunal
Seithipunal


ஆசிய பாரா விளையாட்டில் ஒன்று ஒரே நாளில் இந்திய அணியினர் ஐந்து தங்கம் உள்பட 27 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. 

இதுவரை இந்தியாவுக்கு மொத்தமாக 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் உள்பட 62 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் ஒரே நாளில் 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இன்று (அக்.21) திலீப் கவிட் 100 மீட்டர் தடகளத்தில் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றதோடு, குண்டு எறிதலில் ஆயுஷ் வெர்மா, தடகளத்தில் சிம்ரன் தங்கம் வென்றுள்ளனர். அத்துடன், சச்சின் கிலாரி தேசிய சாதனையுடன் குண்டு எறிதலில் தங்கம் வென்றதோடு, உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

11 வெள்ளிப் பதக்கங்கள்

பன்டி (ஆடவர் உயரம் தாண்டுதல் T44/64), பாக்கியஸ்ரீ ஜாதவ் (மகளிர் குண்டு எறிதல் F34), முகமது யாசர் (ஆடவர் குண்டு எறிதல் F46), மன்ஜீத் (ஆடவர் ஈட்டி எறிதல் F12/13), பிரீத்தி பால் (மகளிர் 100மீ T35), முகமது பேசில் (ஆடவர் 100மீ T47), அகிரா பனோத்து (ஆடவர் 400மீ T35/38) மற்றும் ஷரத் மகானஹள்ளி (ஆடவர் 1500மீ T12/13) உள்பட 11 பேர் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்கள்.

11 வெண்கலப் பதக்கங்கள்

அனுபவ் சௌத்ரி (ஆடவர் 100மீ T35), பிரவீன் (ஆடவர் குண்டு எறிதல் F46), ராகேஷ்பாய் பட் (ஆடவர் 100மீ T37), ரவி ரோங்காலி (ஆடவர் குண்டு எறிதல் F40), சுக்செயின் (ஆடவர் ஈட்டி எறிதல் F55), பிரணவ் தேசாய் (ஆடவர் 100மீ T64), சைலேஷ் குமார் (ஆடவர் நீளம் தாண்டுதல் T42/61/63), கரம்ஜோதி தலால் (மகளிர் வட்டு எறிதல் F55) மற்றும் ஹானி (ஆடவர் வட்டு எறிதல் F37) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றனர்.

05 வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு இந்தியா முன்னேறிய நிலையில், மூன்றாம் நாள் முடிவில் இறுதியில் ஐந்தாம் இடத்துக்கு கீழிறங்கியது. 14 தங்கத்துடன் தாய்லாந்துடன் சமநிலையில் இருந்தாலும் அதிக வெள்ளி வென்றுள்ளதால் மட்டுமே ஐந்தாம் இடத்தில் இந்தியா இருப்பதும் கவனிக்கத்தக்கது.

பதக்கப் பட்டியல்:

1. சீனா - 107 தங்கம் (226 பதக்கங்கள்)

2. ஜப்பான் - 29 தங்கம் (100 பதக்கங்கள்)

3. உஸ்பெகிஸ்தான் - 29 தங்கம் (89 பதக்கங்கள்)

4. தென் கொரியா - 15 தங்கம் (46 பதக்கங்கள்)

5. இந்தியா - 14 தங்கம் (62 பதக்கங்கள்) {22 வெள்ளி}

6. தாய்லாந்து - 14 தங்கம் (62 பதக்கங்கள்) {19 வெள்ளி}


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India wins 27 medals including 5 golds in a single day


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->