செஞ்சி அருகே சிறுமி காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடந்த 12 ஆம் தேதி 7 வயது சிறுமி ஒருவர், செஞ்சி அருகே மாயமானார். 10 நாள்களாக காவல் துறையினர் எங்கும் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகளான 07 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கியபோது மாயமானமை தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 05 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 03 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏ.டி.எஸ்.பி. தலைமையில், 03 டி.எஸ்.பி.க்கள், ஒரு பயிற்சி டி.எஸ்.பி., 03 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படைகள், இதைத் தவிர, காவல் துறையின் சிறப்புக் குற்றப் பிரிவினா் அடங்கிய தனிப்படையினா் ஆகியோா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கு தொடர்பில், போக்சோ குற்றவாளிகள் உள்பட 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், 10 நாள்களாகியும் சிறுமியைக் கண்டறிவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனிடையே சிறுமி மாயமான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government orders transfer of the case involving the disappearance of a young girl near Gingee to the CBCID


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->