மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைய ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 3000; மகாராஷ்டிரா அமைச்சர் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைய ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 3000 தரப்படுவதாக, மகாராஷ்டிர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்குமார் கோரே இன்று (அக். 21) கூறியுள்ளார்.

இன்று மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெய்குமார் கோரே, அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைய ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000 தரப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது; முன்பு நாட்டில் தங்களின் ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சமஸ்தானங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தினர். இப்போது, அதேபோல் ஒரு திட்டத்தை நம் நாட்டில் செயல்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் அளித்த பேட்டியில் அவர் 3 நாள்களாகப் போராட்டத்தில் பங்கேற்பதாகக் கூறினார். மேலும், நாளொன்றுக்கு ரூ. 3,000 கிடைக்கும்போது எதற்காக வீட்டில் உக்கார்ந்திருக்க வேண்டும் எனக் கூறினார்'' என அமைச்சர் கோரே சுட்டிக்காட்டி பேசினார்.

இருப்பினும், அவர் கூறுவது புணேவில் அரசுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டத்தையா? அல்லது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தையா? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஆனால், அமைச்சர் கோரேவின் பேச்சு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Maharashtra minister has alleged that each student was paid Rs 300 to join the protest against the central government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->