நீதிமன்றக் காவலில் இருந்த விடுதலையாகியுள்ள சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ்..!
CJP Leaders Ashutosh and Saurav have been released from judicial custody
நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் ஆகியோர் இன்று (அக். 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அத்து மீறி மூவர்ண கொடியுடன் நுழைந்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் சிஜேபி நிறுவனர்கள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் அக். 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதைத்யடுத்து, அவர்கள் இருவரையும் 05 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அக். 19 ஆம் தேதி அவர்களின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவர்களின் நீதிமன்றக் காவலை மேலும், 02 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அக். 19 ஆம் தேதி சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் உத்தவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதற்கு எதிராக அசுதோஷ், சௌரவ் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 20) அவசர மனு தாக்கல் செய்தனர். அதை இன்று விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் மனுவில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, அதனை நிராகரித்த நிலையில், அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.
அத்துடன், நீட்டிக்கப்பட்ட 02 நாள் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில், மீண்டும் சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் முன்னிலையில் அசுதோஷ், சௌரவ் இருவரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நிர்வாக மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ள நிலையில் இருவரும் விடுதலையாகியுள்ளனர்.
English Summary
CJP Leaders Ashutosh and Saurav have been released from judicial custody