சூடானில் டிரோன் தாக்குதல்; 153 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்.!
153 people killed in a drone attack in Sudan
சூடானில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற உள்நாட்டு போர் நடந்து வருகிறது.சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை பகுதியான ‘அபியே’ என்ற எண்ணெய் வளம் மிக்க பிராந்தியம் உள்ளது. அங்குள்ள சந்தையை குறிவைத்து, சூடான் ராணுவத்தினர் டிரோன் விமானங்கள் மூலம் அடுத்தடுத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த குண்டுகள், சந்தையில் இருந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கில் விழுந்து வெடித்ததால் பெரும் தீக்கிரையான நிலையில், 73 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளமை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சந்தை பகுதிகள் மீது நடத்தப்படும் இத்தகைய வான்வழி தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
English Summary
153 people killed in a drone attack in Sudan