இந்து கோயில்களில் பிற மதத்தினர் வழிபடும்போது உரிய நடைமுறைகளை முறையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..! - Seithipunal
Seithipunal


இந்து கோயில்களில் பிற மதத்தினர் வழிபட செல்லும் போது  உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரத்னம் வெங்கடேஷ் என்பவர், ''தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், பிற மதத்தினர் வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகளை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.'' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. குறித்த மனுவை விசாரித் போது, உரிய விதிமுறைகளின்படியே உறுதிமொழி பெற்ற பிறகு கோயிலுக்குள் அனுமதிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது உரிய விதிமுறைகளைப் பின்பற்றியதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ஸ்ரீநாத் உரிய விதிமுறைகளை பின்பற்றி செல்லவில்லை என செய்திகளில் பார்த்தோம் என்றும் திருவண்ணாமலை கோயிலில், இஸ்லாமியர் ஒருவர் மத அடையாளத்துடன் சென்றதை காண முடிந்தது எனவும் குறிப்பிட்டனர்.

அத்துடன், கோயில்களில் பிற மதத்தினர் வழிபாடு நடத்துவதற்கான நடைமுறைகளை முறையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து உரிய விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என அரசுத் தரப்பு அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கு  வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Madurai Bench of the High Court has ordered that individuals of other faiths must follow the prescribed procedures when worshipping in Hindu temples


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->