அரசு கல்லூரிகளில் உள்ள எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..! - Seithipunal
Seithipunal


 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாட்டில், அரசு ஒதுக்கீட்டு இடங்களின் கீழ், அரசு கல்லூரிகளில் உள்ள எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும். சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புக்கு அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும். சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பேடுகள் (Prospectuses) மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnayushselection.org இல் கிடைக்கும். விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், எக்காரணம் கொண்டும் இணையவழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பத்திற்கான இணையவழிப் பதிவுக் கட்டணம் (Online Registration Fee), இணையவழிச் செயலாக்கக் கட்டணம் (Online Processing Fee) மற்றும் முன்பணக் கல்விக் கட்டணம் (Advance Tuition Fee) ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இணையவழி வங்கிப் பணப்பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விண்ணப்பதாரர்கள் தகுதி, விண்ணப்பக் கட்டணம், கட்டண விவரங்கள், கலந்தாய்வு அட்டவணை மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnayushselection.org இல் உள்ள தொடர்புடைய தகவல் தொகுப்பேடுகளில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய தகவல் தொகுப்பேடுகளை கவனமாகப் படித்து, இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், தேவைப்படும் இடங்களில் உரிய ஆவணங்களை PDF/JPEG வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.எம்.டி. (ஹோமியோபதி) பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு ஒதுக்கீட்டுப் பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் (Government Surrendered Seats), நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (Management Quota Seats) மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (All India Quota Seats) ஆகிய ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை, தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency) நடத்தப்படும் AIAPGET-2026 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலும், முற்றிலும் தகுதி மற்றும் தரவரிசையின் (Merit) அடிப்படையிலும் நடைபெறும். அதன்படி, எம்.டி. (சித்தா) பாடப்பிரிவிற்கு AIAPGET (Siddha)-2026 தேர்வு மதிப்பெண்களும், எம்.டி. (யுனானி) பாடப்பிரிவிற்கு AIAPGET (Unani)-2026 தேர்வு மதிப்பெண்களும், எம்.டி. (ஹோமியோபதி) பாடப்பிரிவிற்கு AIAPGET (Homoeopathy)-2026 தேர்வு மதிப்பெண்களும் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online applications are invited for postgraduate medical degree courses in government colleges


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->