வேளாண் - தோட்டக்கலை துறைக்குத் தேர்வான 69 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்..! - Seithipunal
Seithipunal


வேளாண் - தோட்டக்கலை துறைக்குத் தேர்வான 69 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

''தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக, டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 26 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு முதல்வர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வழங்கிய தேசிய அளவிலான விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், முதல்வரைச் சந்தித்துத் தங்களது விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதில் 2024-2025-ம் ஆண்டுக்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையும், அதே ஆண்டுக்கான சமூகப் பொறுப்புக்கான விருதை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் பெற்றுள்ளது.

மேலும், 2025-2026-ம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையும், சிறந்த செயல்திறனுக்கான சர்க்கரை ஆலைக்கான விருதை கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலையும் வென்றுள்ளன.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வேளாண்மை - உழவர்நலத் துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலர் சாய்குமார், வேளாண்மை துறை செயலர் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay handed over appointment orders to the 69 individuals selected for the Agriculture and Horticulture Department


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->