போக்சோ வழக்கு; 'ஜெம்' வீரமணி உட்பட 3 பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட் ஆர். வீரமணி, உடைந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மீண்டும் 02 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஜெம்' வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் 'ஜெம்' வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை போலீஸார் ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இந்நிலையில், உதவியாளர் கணேசனை 03 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், பணப்பரிவர்த்தனை தொடர்பாக 'ஜெம்' வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 'ஜெம்' வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய 03 பேரையும் மீண்டும் 02 நாட்கள் போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளார். 

அத்துடன், கணேசன் உள்ளிட்ட 04 பேரையும் வரும் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Judge orders police custody for three individuals including Gem Veeramani for further interrogation


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->